குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (15:45 IST)
நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் இளையவர். இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.

இதனை அடுத்து கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மால்தி என்ற பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தை சில மாதங்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் இதை அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை. அதையடுத்து சில முறை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டாலும் முகத்தை மறைத்தே வெளியிடுவார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் குழந்தையின் முகத்தை மறைத்தவாறு பூங்காவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்