புஷ்பா 3 எப்போது உருவாகும்.. அப்டேட் கொடுத்த அல்லு அர்ஜுன்!

vinoth

திங்கள், 17 மார்ச் 2025 (09:44 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. இப்போது வரை கணிசமான திரையரங்குகளில் இந்த படம் ஓடி வருகிறது. படம் இதுவரை 1900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தின் ரீ லோடட் வெர்ஷன் (சுமார் 3 மணிநேரம் 43 நிமிடம்) திரையரங்குகளில் வெளியானது.

இதன் மூலம் இந்திய சினிமாக்களில் அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ படைத்துள்ளது. இதையடுத்து இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இதில் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே படம் ரிலீஸாகி ஓடிடியிலும் கலக்கியது.

புஷ்பா 2 முடிவில் மூன்றாம் பாகத்துக்கான முன்னோட்டமும் கொடுக்கப்பட்டது. அதனால் விரைவில் மூன்றாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுபற்றி பேசியுள்ள தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ரவி “அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவரும் தங்கள் அடுத்தடுத்தப் படங்களை முடிக்க 2028 ஆம் ஆண்டு ஆகும். அதனால் புஷ்பா 3, 2028 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்