அழகிய ஏஞ்சல்.... கியூட் அழகியை வசீகரிக்கும் பிரியா பவானி ஷங்கர்!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:14 IST)
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது  இந்தியன் 2 மற்றும் ராகவா லாரன்சுடன் ருத்ரன் போன்ற படங்களில் பிசியாக நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது அழகிய வெள்ளை நிற உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்