அந்த மாதிரி போட்டோ கேட்ட ரசிகருக்கு மஞ்சிமா அனுப்பிய புகைப்படம்..!

திங்கள், 20 ஜூலை 2020 (07:17 IST)
நயன்தாரா , ஓவியா, அமலா பால் போன்று கேராவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகள் இன்று முன்னணி நடிகையாக வளர்த்துள்ளனர். அந்த லிஸ்ட்டில்  இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான "இப்படை வெல்லும்" சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். இந்நிலையில் மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரது ஒருவர் மஞ்சுமாவிடம், உங்களின் செக்ஸியான புகைப்படம் ஒன்றை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.'


உடனடியாக அந்த நபருக்கு தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை அனுப்பி செம நோஸ் கட் செய்துள்ளார். அவரது இந்த பதிலை அனைவரும் பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும். பப்ளியான பேபியாக இருக்கும் அவரது பேபி போட்டோவை கொஞ்சி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்