பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்கும் பிருத்விராஜ்?... லேட்டஸ்ட் தகவல்!

வியாழன், 27 ஜூலை 2023 (09:03 IST)
பிரபாஸ், பிருத்விராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கேஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் இணைந்து நடித்தபோது பிருத்விராஜ், பிரபாஸுக்கு ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த கதையைக் கேட்டு பிரபாஸ் கண்டிப்பாக இந்த படத்தில் நடிப்பதாக உறுதியளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது சலார், கல்கி மற்றும் இயக்குனர் மாருதியின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்துவரும் பிரபாஸ், அந்த படங்களை எல்லாம் முடித்த பின்னர் இந்த படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்