'சூது கவ்வும்' மற்றும் 'காதலும் கடந்து போகும்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்தியுடன், நடிகை க்ருத்தி ஷெட்டி கதாநாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டே படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.