பிரதாப்போத்தன் படத்துக்கு பின்னடைவு

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (14:34 IST)
மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரதாப்போத்தன் ஒருகாலத்தில் இயக்குனர். கமல், பிரபு நடிப்பில் வெளிவந்த வெற்றிவிழா இவர் இயக்கிய படம்தான்.


 


இயக்கத்திலிருந்து தள்ளியிருந்த பிரதாப்போத்தன், துல்கர் சல்மானை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.
 
இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை அஞ்சலி மேனன் எழுதினார். படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நிலையில், படம் தள்ளிப் போயுள்ளது.
 
பிரதாப்போத்தனின் முன்கோபம் காரணமாக அவர் படத்தை முடிப்பாரா என்று தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட சந்தேகமே படம் தள்ளிப் போனதுக்கு காரணம் என்கிறார்கள். ஆனால், பிரதாப்போத்தன், ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருப்பதால் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளதாக கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்