முதல் நாள் வசூலில் பட்டையக் கிளப்பிய ப்ரதீப்பின் ‘ட்யூட்’ திரைப்படம்!

vinoth

சனி, 18 அக்டோபர் 2025 (08:41 IST)
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். அடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது.

இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது.

அதை படம் பூர்த்தி செய்துள்ள நிலையில் வசூலில் தீபாவளி ரிலீஸ் படங்களில் முன்னணியில் உள்ளது. இந்த படம் முதல் நாளில் இந்திய அளவில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக ஆன்லைன் ட்ராக்கிங் தளமான sacnilk தெரிவித்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்