சீரியல் பாணியில் நடிகரை மாற்றிய கேஜிஎப் 2 படக்குழு… இத கவனிச்சீங்களா?

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (09:47 IST)
கேஜிஎப் 2 படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார். கேஜிஎப் 2 படத்தின் டிரைலர்  நேற்று வெளியானது.

இதில் நடிகர் பிரகாஷ் நடித்துள்ள கதாபாத்திரம் அனைவரையும் கவனிக்கவைத்துள்ளது. ஏனென்றால் முதல் பாகத்தில் கேஜிஎப் கதையை சொல்பவராக கன்னட நடிகர் அனந்த் நாக் நடித்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் தற்போது பிரகாஷ் ராஜ் அந்த வேடத்தில் நடித்துள்ளார். வழக்கமாக சீரியலில்தான் இப்படி ஒருவர் நடித்த கதாபாத்திரத்தில் மற்றவரை நடிக்க வைப்பார்கள். இந்த மாற்றம் குறித்து ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்