தமிழ் சினிமாவின் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் சிலர், நடிகர் அஜித் சார் தனது படங்களின் படப்பிடிப்பை அடிக்கடி ஹைதராபாத்தில் வைப்பதால், சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய தகவல் படி, மழைக்காலத்தை கருத்தில் கொண்டும், அமைதியான சூழலை விரும்புவதாலும், படக்குழு படப்பிடிப்பை ஹைதராபாத்துக்கு மாற்றியுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தைத் தயாரிக்க ரோமியோ பிக்சர்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், நடிகர் அஜித் ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம்: அவர் நடிக்கும் படத்தை எடுக்கும்போது, அந்த நிறுவனம் வேறு எந்த படத்தையும் தயாரிக்கக் கூடாது.