பிரபலங்களே வேண்டாம்… பிரபு சாலமன் அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (18:37 IST)
‘தொடரி’ படத்தின் தோல்வியால், இனிமேல் பிரபலங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் பிரபு சாலமன்.


 

 
புதுமுகங்களாக அறிமுகமான விக்ரம் பிரபு, லட்சுமி மேனனை வைத்து ‘கும்கி’ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன், மீண்டும் புதுமுகங்களுடன் ‘கும்கி’ இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். ‘தொடரி’ படத்தின் தோல்விக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினை வைத்து பிரபு சாலமன் படம் இயக்கப் போவதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில், தற்போது புதுமுகங்களை வைத்து ‘கும்கி’ இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், முதல் பாகத்தைப் போலவே படம் முழுக்க காதல் கதை மற்றும் யானையை மையமாகக் கொண்டு எடுக்க இருப்பதாகவும் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமாரே, இரண்டாம் பாகத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்