பிரபுதேவா ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

vinoth
வியாழன், 16 மே 2024 (14:02 IST)
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. இவர்கள் கூட்டணியில் உருவான காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மிகப்பெரிய கல்ட் கிளாசிக் பாடல்களாக இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. ஜெண்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடியிருந்தார்.

இருவரும் கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான மின்சாரக் கனவு படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இப்போது ஆறாவது முறையாக இணைய உள்ளது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த படத்தை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மனோஜ் என் எஸ் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மே 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்போது படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்