பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களின் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ள ஆதிபுருஷ் என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது
பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு தொடங்கிய சில மணி நேரத்தில் அந்த படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அந்த தீயை அணைக்க தீவிர முயற்சி செய்தனர்
இருப்பினும் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த செட் முழுவதும் தீயில் நாசம் ஆனதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபாஸ் நடிக்கும் படமொன்றுக்காக பல கோடி செலவில் போடப்பட்டிருந்த செட் முதல்நாள் படப்பிடிப்பிலேயே எரிந்து நாசமானது படக்குழுவினர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பிரபாஸ் உள்பட படக்குழுவினர் யாருக்கும் காயம் ஏதும் இல்லை என்பது ஒரு ஆறுதல் செய்தி.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் இதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது