ஜோடியாக வலம் வரும் பிரபாஸ்-அனுஷ்கா ! காதல் உறுதிதான்! மீண்டும் டோலிவுட்டில் பரபரப்பு

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (12:21 IST)
மீண்டும் பிரபாஸ்-அனுஷ்கா ஒன்றாக சுற்றுவதால் இருவரும் காதலில் இருப்பது உறுதி என தெலுங்கு சினிமா வட்டாரங்களில சொல்கிறார்கள். 


 
தமிழ்,  தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, தமிழில்  வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், சிங்கம்-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் டாப் நடிகர்ளின் படங்களில் நடித்துள்ளார்.   இவர் நடிப்பில் வந்த பாகுபலி , பாகுபலி2 ஆகிய படங்கள் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடைசியாக அனுஷ்கா  நடித்து பாகமதி படம் வந்தது.
 
அதன் பிறகு அவரது உடல் எடை அதிகரித்து விட்டதால் படங்களில் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து அனுஷ்கா உடல் எடை குறைப்பு சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இப்போது கணிசமாக உடல் எடையை குறைத்துவிட்டு அனுஷ்கா மீண்டும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 37 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். 
 
அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் பரவியது.
 
 
இதனை இருவரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில் பாகுபலி டைரக்டர் ராஜமவுலியின் மகன் திருமணத்தில் இருவரும் ஜோடியாக பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். மணமக்களை வாழ்த்தும்போதும் ஜோடியாகவே சென்றனர். திருமண நிகழ்ச்சியில் இணைந்து நடனமும் ஆடினார்கள்.
 
 
இந்த படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர்கள் காதலிப்பது உறுதியாகி உள்ளது என்று தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கிறார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்