பார்த்தவுடன் காதலிக்க தோன்றும் நடிகை: பிரபாஸ் பதில்

திங்கள், 31 டிசம்பர் 2018 (12:38 IST)
பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடித்த பாகுபலி படம் வெற்றி பெற்றது. இதையடுத்து இவர்கள் இருவரும்  பாகுபலி 2 படத்திலும் சேர்ந்து நடித்தனர் இதனால் இவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும்  சிலர் கிளப்பிவிட்டனர். 


 
இது குறித்து விளக்கம் அளித்த பிரபாஸ், சில படங்களில் சேர்ந்து நடித்தால் உடனே காதல், திருமணம் என்று சொல்வதா என்று ஆவேசப்பட்டவர்,


 
தங்களுக்குள் எதுவும் இல்லை என மறுத்தார். இதற்கிடையே பிரபாஸிடம் அண்மையில் ஒரு பேட்டியில், பார்த்தவுடன் காதலிக்க தோன்றும் கதாநாயகி யார் என கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் பதில்அளித்த பிரபாஸ், காத்ரீனா கைப்பை பார்த்தவுடன் காதலிக்க தோன்றுகிறது என அதிரவைத்தார். கத்ரீனா கைப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்