அடிபொலியானு.. ட்ரெய்லரே தெறிக்குதே! தமிழிலும் எதிர்பார்ப்பை தரும் மோகன்லாலின் ‘தொடரும்’!

Prasanth Karthick

செவ்வாய், 6 மே 2025 (09:38 IST)

மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் மோகன்லாலின் ‘துடரும்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடித்து, தருண் மூர்த்தி இயக்கியுள்ள படம் ‘துடரும்’. இதில் ஷோபனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளனர். இந்த படம் கேரளாவில் கடந்த மாதம் 24ம் தேதி வெளியான நிலையில் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

 

இதுவரை ரூ.120 கோடி வசூலித்துள்ள இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளதால் படத்தை தமிழில் டப்பிங் செய்து மே 9ம் தேதி ரிலீஸ் செய்கின்றனர். அதற்கான தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. பென்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் வரும் மோகன்லால் ஆக்‌ஷன், அதிரடியில் வழக்கம்போல மாஸ் காட்டியுள்ளார்.

 

தமிழில் டப்பிங் செய்யப்படுவதை கவனத்தில் கொண்டு ஊர் பெயர்களை எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயராக மாற்றியுள்ளார்கள். மோகன்லால் ‘முருகா’ என வேண்டிக் கொள்வதாக டப்பிங் மாற்றப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது வைரலாகியுள்ள நிலையில் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்