பிரபல யூடியூபர் தேவராஜ் படேல் சாலை விபத்தில் மரணம்- முதல்வர் இரங்கல்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (21:21 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் தேவராஜ் படேல்(22). இவர் நேற்று ராய்பூரில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் தேவராஜ் படேல். இவர் டில் சே புரா லக்டா ஹாயென்ற வீடியோ மூலம் பிரபலமானார்.  இந்த நிலையில்,   நேற்று சத்தீஸ்கர் மா நில தலை நகர் ராய்பூரில் அருகே லபாந்தி பகுதியில்  தன் யூடியூபிற்கு கண்டென்ட் சேகரிக்க சென்று தனது பைக்கில் கொண்டிருந்தார்.

அப்போது, இவர் சென்ற வாகனத்தின் மீது லாரி மோதியது. இதில், தேவராஜ் படேலின் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இவரது மறைவுக்கு முதல்வர் பூஷே பாகல் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்