மீண்டும் மீண்டும் பொன்னியின் செல்வனுக்கு வரும் சிக்கல்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:34 IST)
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை மகாராஷ்டிராவில் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

கிட்டத்தட்ட முதல்பாகத்துக்கான 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிராவில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் வேகமாக பரவும் கொரோனா தொற்றால் மகாராஷ்டிராவில் கடுமையான கட்டுப்பாடுகளோடு இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போது படப்பிடிப்பு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்