முடியும் தருவாயில்பொன்னியின் செல்வன்… ரிலீஸ் திட்டங்கள் !

புதன், 17 பிப்ரவரி 2021 (09:01 IST)
மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் 2022 ஆம் ஆண்டுதான் வெளியாகுமாம்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இப்போது ஹைதராபாத்திலும் அடுத்த மாதம் ஜெய்ப்பூரிலும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்தாலும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக நீண்ட நாட்களை எடுத்துக் கொள்ள படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால் படத்தின் முதல்பாகம் 2022 ஆம் ஆண்டின் முதல் பகுதியிலும் இரண்டாம் பாகம் பின் பாதியிலும் ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்