அஞ்சலியின் ‘ஜான்சி’: இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ்

வியாழன், 27 அக்டோபர் 2022 (13:19 IST)
அஞ்சலியின் ‘ஜான்சி’: இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ்
பிரபல நடிகை அஞ்சலி நடித்த ஜான்சி என்ற வெப்தொடர் இன்று முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது, இந்த வெப்தொடர் விறுவிறுப்பாக  இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்தொடரில் அஞ்சலி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்
 
திடீரென ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட அஞ்சலி பழசை எல்லாம் மறந்துவிட்டு கணவர் குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது தான் இந்த தொடரின் கதை என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த தொடரில் அஞ்சலி டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளில் மிகவும் அபாரமாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்