ஜனவரி 12 முதல் 18ஆம் தேதி வரை சிறப்புக்காட்சி: அனுமதி கேட்டு கோரிக்கை!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (17:45 IST)
பொங்கல் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சியை திரையிட அனுமதி கேட்டு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் இருந்து தமிழக அரசு அரசுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த கோரிக்கைக்கு விரைவில் தமிழக அரசு பதில் அளிக்கும் என்றும் சிறப்பு காட்சியை திரையிட அனுமதி அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்