போதை பொருள் விவகாரம்; பிக்பாஸ் நடிகைக்கு போலீஸ் சம்மன்

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (14:45 IST)
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை முமைத்கானின் முகவரி தெரியாததால், ஹைதராபாத் காவல்துறையினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.


 

 
போதை பொருள் வழக்கில் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். 
 
இந்த விவாகரத்தில் மும்பையை சேர்ந்த நடிகை முமைத்கான் பெயர் சிக்கியது. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இவரது முகவரி தெரியாததால் காவல்துறையினர் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 
 
அதில் வரும் 27ஆம் தேதி முமைத்கான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்