போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி..! ’லியோ’ வெற்றி விழா! – காவல்துறை அனுமதி!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (11:00 IST)
லியோ படத்தின் வெற்றி விழாவை சென்னையில் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான ஒரு வாரத்திலேயே 461+ கோடிகளை வசூலித்து படம் மிகப் பெரும் ஹிட் அடித்துள்ளது.

பட ரிலீசுக்கு முன்னர் படக்குழுவினர் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த நிகழ்ச்சி நடக்காமல் போனது. இது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில் அதற்கு ஈடாக லியோ வெற்றி விழாவை சென்னையில் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக காவல்துறையில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது யார் என்ற விவரங்களை காவல்துறை கேட்டிருந்தது. தற்போது லியோவின் வெற்றி விழாவை சென்னையில் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நாளை மறுநாள் நவம்பர்1-ம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழா நடைபெற உள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்