'இருட்டு அறையில் முரட்டு குத்து' படக்குழு மீது போலீஸ் புகார்

செவ்வாய், 8 மே 2018 (12:01 IST)
கடந்த வெள்ளியன்று வெளியான சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் , வைபவி, யாஷிகா நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1 கோடியும் தமிழகம் முழுவதும் ரூ.11 கோடிக்கும் மேலும் வசூல் செய்துள்ளது.
 
இருப்பினும் இந்த படத்திற்கு திரையுலகினர் பலரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கும் நிலையில் நாற்றமெடுக்கும் இப்படி ஒரு படத்தை எடுத்து பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்று இயக்குனர் பாரதிராஜா நேற்று காட்டமாகவே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்
 
இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே இதே படக்குழுவினர் 'ஹரஹர மகாதேவகி என்ற ஆபாச படத்தை தயாரித்துள்ள நிலையில் தற்போது அதைவிட அருவருக்கத்தக்க ஒரு படமாக 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை உருவாக்கியுள்ளதாகவும், இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் இயக்குனர் சந்தோஷ் சிவன் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த புகாரில் மாணவர் அமைப்பினர் கூறியுள்ளனர்.
 
இருப்பினும் சென்சார் செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற படங்களை நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் வெளியாவதை  தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்