தயவுசெய்து லீக் செய்யாதீங்க. விஜய் 61 படக்குழுவினர்கள் வேண்டுகோள்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (05:35 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் ரகசியமாக தகுந்த பாதுகாப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஊடகங்கள் இந்த படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு வருகிறது.



 


விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாகவும், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ கேரக்டரில் நடிப்பதாகவும், அந்த கேரக்டர்களின் பெயர்களை கூட வெளியிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன

ஆனால் இது எதுவுமே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்தி அல்ல. இந்நிலையில் 'விஜய் 61' படக்குழ் இன்று ஊடகங்களுக்கு செய்திக்குறிப்பு ஒன்றை வெளீயிட்டுள்ளது.

விஜய் 61 திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் பலரது கடின உழைப்பில் உருவாகி வருவதாகவும், இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவல் இல்லாமல் லீக் செய்யும் செய்திகள் படத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருப்பதால் படக்குழுவினர்களே உண்மையான செய்திகளை வெளியிடும் வரை தயவுசெய்து காத்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்