திகில் நிறைந்த கீர்த்தி சுரேஷின் "பென்குயின்" டீசர்..!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (12:12 IST)
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பென்குயின்'. இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு     கடந்த செப்டம்பர் 12ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. ஆதலால், ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து தற்போது "பென்குயின்" படமும் வருகிற ஜூன் 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்தபடியே சற்றுமுன் இந்த டீசரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் நான்கு முன்னணி நடிகைகள் வெளியிட்டுள்ளனர். அதாவது, தமிழில் நடிகை திரிஷாவும், மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியாரும், ஹிந்தியில் நடிகை டாப்ஸியும், தெலுங்கில் நடிகை சமந்தாவும் வெளியிட்டுள்ளனர். இதில் குடைபிடித்த மர்ம ஆசாமி ஒருவன் கீர்த்தி சுரேஷின் மகன் (அஜய்) கொன்று தனக்கு இரையாக்கி கொள்கிறான். விறுவிறுப்பான திகில் நிறைந்த இந்த டீசர் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்