நாடு தாண்டி செல்லும் அசுரன் – எந்த மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது தெரியுமா?

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (11:03 IST)
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் அசுரன். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்த அசுரன்  திரைப்படம் இப்போது ஆண்டு இறுதியில் மற்றொரு சாதனையையும் செய்துள்ளது. இந்த படம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவலான வெக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது.

இந்நிலையில் இந்த படம் இப்போது தென்னிந்தியாவின் மற்ற மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் நாடுதாண்டி முதல் முறையாக சீனாவின் மாண்டரின் மொழியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. கொரோனா ஊரடங்குக்குப் பின் இதன் பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே மலையாளப் படமான த்ரிஷ்யம் சீனாவில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே பிகே, பாகுபலி மற்றும் மாம் ஆகிய படங்களும் அங்கு மிகப்பெரிய வெற்றியை குவித்தன. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்