நிர்வாணமாதான் நடிப்பேன்.. உனக்கென்ன..! - பயில்வானிடம் நடிகை வாக்குவாதம்!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (13:42 IST)
இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர், நடிகர் பயில்வான் ரங்கநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பார்த்திபன் இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான படம் “இரவின் நிழல்”. இந்த படத்தில் ரேகா நாயர், பிரிகிடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒரு காட்சியில் பிரிகிடா மற்றும் ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்துள்ளனர்.
 
யூட்யூப் சேனல் நடத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயரின் அரை நிர்வாண காட்சி குறித்து மோசமான வார்த்தைகளில் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் ரங்கநாதன் வாக்கிங் சென்றபோது அங்கு ரேகா நாயரும் வாக்கிங் சென்றுள்ளார்.
 
பயில்வானை பார்த்த ரேகா நாயர் தன்னை குறித்து கேவலமாக பேசியது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்த நிலையில் சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் “ஆடையில்லாமல் நடிப்பது என் விருப்பம். நான் என்ன உனது மகளா? மனைவியா? உனக்கு என்ன வந்தது” என்று ஆவேசமாக ரேகா நாயர் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்