என்னை போலவே கூட்டணியில் சேருங்கள்.. விஜய்யை சந்திக்கிறார் பவன் கல்யாண்?

Siva

புதன், 2 ஜூலை 2025 (12:53 IST)
எம்.ஜி.ஆர், என்.டி.ஆரை  தவிர தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகரும் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்ததில்லை. எனவே, கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதே சரியான முறை என்று நடிகர் விஜய்யிடம் எடுத்துரைப்பதற்காக, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 
 
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை இணைக்கும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய்யிடம் இருந்து இதுவரை சாதகமான பதில் வரவில்லை என தெரிகிறது. எனவே விஜய்யை பவன் கல்யாண் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
விஜயகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உட்பட பல தென் இந்திய நடிகர்கள் கட்சி தொடங்கி தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்ததை, விஜய்க்கு பவன் கல்யாண்,  சுட்டிக்காட்டுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தான் சரியான நேரத்தில் பா.ஜ.க - தெலுங்கு தேசம் கூட்டணியில் சேர்ந்ததால்தான் தற்போது ஆந்திராவில் துணை முதல்வராக இருப்பதாக விஜய்க்கு அவர் எடுத்துச் சொல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு, விஜய் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால், அதே நேரத்தில், பா.ஜ.க இருக்கும் கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என்றும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுவதால், இந்த அரசியல் நகர்வில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்