போலீசை பின்னி பெடலெடுக்கும் ஸ்னேகா - ட்ரெண்டிங்கில் "பட்டாஸ்" ஆக்ஷன் காட்சி!

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (11:31 IST)
பொங்கல் தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளியான படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். 
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது. தமிழரின் வீர விளையாட்டான அடிமுறை கலையை மையமாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. 
 
இப்படத்தில் தனுஷுக்கு நிகராக வீர தமிழ் பெண்ணாகவும், வீர மனைவியாகவும் ஸ்னேகா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை ஸ்னேகா நிறைமாத கர்ப்பினியாக இருந்து நடித்தது தான் பாராட்டுக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற நடிகை சினேகாவின் சண்டை காட்சி வீடியோ யூடியூபில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்று ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்