தனுஷ் படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகருக்கு சம்பளமாக 120 கோடி !

வியாழன், 23 ஜனவரி 2020 (08:55 IST)
தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க அக்‌ஷய் குமாருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் தனுஷ்.

இந்த படத்தை அவரது முதல் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இந்த படத்தில்  தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்‌ஷ்ய் குமார் நடிக்க இருக்கிறார். கதாநாயகனாக நடித்து வரும் அக்‌ஷய் குமார் குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிப்பதற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்