இன்னும் 17 நாட்கள் மட்டுமே: சிம்புவின் ‘பத்து தல’ சூப்பர் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:43 IST)
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது 
முதல் கட்டமாக கௌதம் கார்த்திக் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்றது என்பதும் நேற்று முதல் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றும் இன்னும் 17 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது கிருஷ்ணகுமார் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே சிம்பு நடித்து முடித்துள்ள மாநாடு, மஹா ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தற்போது அவர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்