நாளை முதல் ‘பதான்’ திரைப்படத்திற்கு கட்டண சலுகை: அதிரடி அறிவிப்பு..!
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:05 IST)
ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் ரூபாய் 500 கோடி வசூல் செய்த முதல் ஹிந்தி படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. இதற்கு முன் 500 கோடி வசூல் செய்த பாகுபலி 2 திரைப்படம் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘பதான்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்தியாவில் உள்ள முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ‘பதான்’ திரைப்படத்திற்கு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ‘பதான்’ படத்திற்கு திரையரங்குகளில் 110 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் ‘பதான்’ திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.