நான் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை: நடிகர் பசுபதி அறிவிப்பு!

வெள்ளி, 30 ஜூலை 2021 (15:59 IST)
நான் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை: நடிகர் பசுபதி அறிவிப்பு!
சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ரங்கன் வாத்தியார் என்ற கேரக்டரில் பசுபதி நடித்து இருந்தார் என்பதும் அவர் நடித்திருந்தார் என்று கூறுவதைவிட கேரக்டராக வாழ்ந்திருந்தார் என்று கூறுவதுதான் பொருத்தம் என்றும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் நடித்த பசுபதி வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் சமூக வலைதளங்கள் இருப்பதாகவும் தான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதை கூறிக் கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பசுபதி புகழ் பெற்ற பிறகு அவரது பெயரில் பல சமூக வழக்கங்கள் போலியாக தொடங்கப்பட்டுள்ளதை அடுத்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்