பெருமைப்பட வேண்டிய படைப்பு: ’சார்பாட்டா பரம்பரை’ குறித்து சிவகார்த்திகேயன்!

வியாழன், 29 ஜூலை 2021 (14:38 IST)
பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு தொடர்ச்சியாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிய பின்னரும் திரையுலக பிரமுகர்களும் பாராட்டுக்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ’சார்பாட்டா பரம்பரை படத்தை பாராட்டிய நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்திற்காக உழைத்த அனைவரும் பெருமை படவேண்டிய படைப்பு.  இந்த படத்தில்  பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த படம் மிக அருமையான படம். தயவு செய்து யாரும் இந்த படத்தை மிஸ் செய்து விட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்