பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு 7’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு முதல் போஸ்டர் ஒட்டுவது ,வரை எல்லாமே பார்த்திபன் தான் செய்தது. எனவே பார்த்திபன் இந்த படத்தை தனது வாழ்நாள் சாதனையாக கருதி கடந்த வெள்ளி அன்று வெளியிட்டார்
இந்த படம் ஆரம்பத்தில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற போதிலும் தியேட்டரில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்பதால் காட்சிகள் குறைக்கப்பட்டது. மேலும் வரும் 27ம் தேதி சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டுப் பிள்ளை’ வெளிவர இருப்பதால் வரும் வியாழனுடன் இந்த படம் தூக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகிறது
இந்த நிலையில் நேற்று பார்த்திபன் வெளியிட்ட ஒரு வீடியோவில் தான் இந்த படத்தை கஷ்டப்பட்டு உருவாகியுள்ளதாகவும் இந்த படம் தற்போது தான் பிக்கப் ஆகி வருவதாகவும் பிக்கப் ஆகும் நேரத்தில் இந்த படத்தை தியேட்டர் அதிபர்கள் தூக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். எந்த ஒரு நல்ல படைப்பாக இருந்தாலும் அந்த படம் மக்களிடம் போய் சேர வேண்டும் என்றும் தியேட்டர் அதிபர்கள் இன்னும் இந்த படத்திற்கு என ஒரு சில தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்
இந்த நிலையில் தற்போது திடீரென ஒரு ஆவேசமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: # OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது’
பார்த்திபனின் இந்த டுவிட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 100 விமர்சகர்கள் இருந்தால் அதில் 90 பேர் பாசிடிவ் விமர்சனமும், 10 பேர் நெகட்டிவ் விமர்சனமும் செய்வது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு விமர்சனம் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் பார்த்திபன் போன்ற படைப்பாளிகள் இருப்பது தான் அவருடைய மரியாதைக்கு அழகு என்றும் இதுபோன்று டுவீட் போடுவது சரியா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்