விருது கிடைத்து என்ன பிரயோஜனம்: என் படத்தை இன்னும் ஒருத்தரும் வாங்கலை: பார்த்திபன் புலம்பல்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (15:00 IST)
பார்த்திபன் இயக்கி நடித்த ’ஒத்த செருப்பு’ படத்திற்கு மத்திய அரசு விருது அளித்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் மத்திய அரசு என்னுடைய படத்திற்கு விருது கிடைத்தாலும் இந்த படத்தை இன்னும் ஒரு தொலைக்காட்சியும் வாங்கவில்லை என பார்த்திபன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்
 
மத்திய அரசு இன்று தமிழில் வெளியான ’ஒத்த செருப்பு’ மற்றும் ’ஹவுஸ் ஓனர்’ ஆகிய திரைப்படங்களுக்கு பனோரமா விருது அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பார்த்திபன் அவர்கள் பேசியதாவது:
 
இந்த வருடத்தின் நல்ல படங்கள் கேட்டகிரியில் ஒத்த செருப்பு தேர்வு படத்தை தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி. இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்
 
இந்த படத்திற்கு விருது கிடைத்தாலும் இந்த படத்திற்காக நான் செய்த செலவு கூட எனக்கு திரும்ப கிடைக்க வில்லை. தொலைக்காட்சி உரிமையை கூட இன்னும் எந்த தொலைக்காட்சியும் வாங்கவில்லை. நெட்ப்ளிக்ஸ் மட்டுமே எனக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்தனர்.  திரையரங்குகள் வெகு சொற்பமான தொகையை தான் எனக்கு கொடுத்தனர் என்று அந்த பேட்டியில் பார்த்திபன் புலம்பியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்