பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் தொலைக்காட்சி பிரிமியர் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (09:12 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் சில மாதங்களுக்கு திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியானது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதைத் தாண்டி சுவாரஸ்யமாக எதுவுமே படத்தில் இல்லை என்பதால் படத்தை பார்த்த ரசிகர்கள் சலிப்படைந்தனர். ஆனாலும் பார்த்திபனின் இந்த முயற்சிக்காக பலரும் படத்தை பார்த்து பாராட்டினர்.

அதன் பின்னர் ஓடிடியில் ரிலீஸான இந்த திரைப்படம் இப்போது முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. வரும் ஜூன் 25 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் படம் பிரீமியர் ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்