இரவின் நிழல் மேடையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்… ரஹ்மானின் ரியாக்‌ஷன்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (09:26 IST)
பார்த்திபன் இயக்கி நடிக்கும் இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் ரஹ்மான் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவின் போது திடீரென மைக் வேலை செய்யாததால் பார்த்திபன் கோபமாகி மைக்கை தூக்கி எறிந்தார். இதைப் பார்த்து தர்மசங்கடமான ரஹ்மான் “விடுங்க சார்” என சமாதானம் செய்தார். பின்னர் தன்னுடைய செய்கைக்காக பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்