மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஜெயராம். இவர் பொன்னர் சங்கர், சரோஜா, சூர்யன், தெனாலி, பரமசிவம், பிரண்ட்ஸ், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்த கண் தான விழிப்புணர்வு பேரணியில், தனது கண்களை தானம் செய்து ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார் நடிகர் ஜெயராம்.