நடிகராக மாறுகிறாரா பா.ரஞ்சித்: வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (08:13 IST)
கோலிவுட் திரையுலகில் பல இயக்குனர்கள் நடிகர்களாக மாறி வருவது வழக்கமான ஒன்றே. கவுதம் மேனன் உள்பட ஒரு சில இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஒரு சிலர் இயக்குனர்களோ முழுநேர நடிகராக மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் நடிகராக மாறி இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, போன்ற படங்களை இயக்கியும் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களை தயாரித்தவருமான இயக்குனர் பா ரஞ்சித் தற்போது ’சல்பேட்டா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் 
 
ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படம் வடசென்னையை சேர்ந்த பாக்ஸிங் கலைஞர் ஒருவரின் உண்மை கதையை ஒட்டி உருவாகி வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரபரப்பு முடிந்த பின்னர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பா.ரஞ்சித் நடிக்க இருப்பதாகவும், அவர் பாக்சர் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ரஞ்சித் பாக்ஸிங் பயிற்சி செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பா.ரஞ்சித், சல்பேட்டா’ படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Boxing

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்