பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’… கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ துணுக்கு!

வியாழன், 14 ஜூலை 2022 (09:20 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான தென்மா இசையமைக்கிறார். வழக்கமாக ரஞ்சித் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பேசப்படும். இந்த முறை நட்சத்திரம் நகர்கிறது படம் முழுக்க முழுக்க காதலை பேச உள்ளதாக பா ரஞ்சித் கூறியுள்ளார்.

இந்த படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் உள்ளிட்ட காதலின் பல பரிமாணங்களைப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்