பா ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

புதன், 6 ஜூலை 2022 (18:31 IST)
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று மாலை நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது 
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமாகவும் அட்டகாசமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கலையரசன், காளிதாஸ் ஜெயராம் துஷாரா விஜயன், உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்