கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்குகிறாரா பா ரஞ்சித்?

vinoth

ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (08:36 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக தற்போதிருக்கும் பா.ரஞ்சித் 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில்  தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை  இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் வேடத்தில் ஆர்யா நடிக்கிறார்.

இந்நிலையில் பா ரஞ்சித் இப்போது இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரரான பல்வங்கர் பலூவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலூவின் வாழ்க்கை வரலாற்றை பிரபல வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா “A CORNER OF A FOREIGN FRIEND” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சமீபத்தில் கலந்துகொண்ட பா ரஞ்சித் இந்த படத்தை இயக்க தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பேச்சுவார்த்தை நிலையில்தான் இந்த படம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்