பொதுவாக, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பல்வேறு துறைகளை சேர்ந்த திறமையான அல்லது பிரபலங்கள் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால், முந்தைய 8 சீசன்களுடன் ஒப்பிடும்போது, இந்த சீசனில் பங்கேற்றுள்ள பல போட்டியாளர்கள் தகுதி குறைவானவர்கள் என்பது போன்ற கருத்துக்களை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
போட்டியாளர்கள் அனைவரும் வாக்குகளை அளித்ததில், திவாகர் மற்றும் வியானா ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று, பிக் பாஸ் வீட்டிற்கு பொருத்தமில்லாத நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.