சியான் விக்ரமின் ‘தங்கலான்’ டீசர்.. பா ரஞ்சித் வேற லெவல் உருவாக்கம்..!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (11:39 IST)
சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  
 
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  
 
பிரமாண்டமான காட்சிகள்,  ஆக்ரோஷமான விக்ரமின் நடிப்பு, இதுவரை  இல்லாத அளவில் மாளவிகா மோகனன் கெட்டப், ஜிவி பிரகாசம் மிரட்டல் பின்னணி இசை என இந்த படத்தின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருப்பதாக கருதப்படுகிறது.
 
மொத்தத்தில் பா.ரஞ்சத்தின் வேற லெவல் உருவாக்கம் தான் இந்த ‘தங்கலான்’ படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இந்த படம் பா ரஞ்சித்தின் முந்தைய படங்களை விட மிகச் சிறந்த வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்