தங்கலான் பட டீஸர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (17:10 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பாரவதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
 

இப்பட ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்பட ஷூட்டிங் நிறைவடைந்த  நிலையில் தங்கலான் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், இன்று தங்கலான்  படத்தின் டீசர் அப்டேட் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அதன்படி,  பா.ரஞ்சித் இயக்கத்தில்,  விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இப்படத்தின் டீசர் வரும் நம்பவர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்