தடயங்களை அழிக்கவே மருத்துவமனை மீது தாக்குதலா? கொல்கத்தா உயர்நீதிமன்றம் கேள்வி..!

Mahendran

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (15:48 IST)
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரி மீது தாக்குதல் நடந்த நிலையில் தடயங்களை அழிக்கவே இந்த தாக்குதலா? என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா அரசு மருத்துவமனை மீதான தாக்குதல் சம்பவத்திற்கு மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது,.

மாநில அரசு ஒட்டுமொத்த செயலிழந்த நிலைமைக்கு வந்து விட்டதா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மூடிவிட்டு அதில் இருக்கும் அனைத்து நோயாளிகளையும் வேறு மருத்துவமனைக்கு மாற்றங்கள் என்றும் அதில் எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள் என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது
 
மேற்குவங்க காவல்துறை காவல்துறையை கடுமையாக கண்டித்து உள்ள நீதிமன்றம் ஒரு மருத்துவமனையை காவல் துறை பாதுகாக்க முடியவில்லை என்றால் கவலை ஏற்படுகிறது என்றும் பிறகு எப்படி மருத்துவர்கள் அச்சம் இல்லாமல் வேலை செய்ய முடியும் என்றும் கேட்டுள்ளது.

இந்த மருத்துவமனை தாக்குதலே தடயங்களை அழிப்பதற்காக என்றும் இந்த தாக்குதல் குறித்த பின்னணியை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்