தியானத்தில் இறங்கி மன நிம்மதியை தேடும் ஓவியா - லைக்ஸ் அள்ளும் போஸ்ட்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:45 IST)
பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
 
பிக்பாஸ் மூலம் அதிக புகழ் அடைந்தவர் என்றால் அது ஓவியாதான். டைட்டிலில் வெற்றி பெற்ற ஆரவ்வைக் கூட மறந்துவிட்டார்கள். ரசிகர்கள் ஓவியாவை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். இதனால் ஓவியாவுக்கு மார்க்கெட் கூடுகிறது. பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் குவிகின்றன.
ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 90ml என்ற சர்ச்சையான படத்தில் நடித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். ஆனால், அதையெல்லாம் இக்னோர் செய்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என கேரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்.இந்நிலையில் தற்போது அமைதியான இடத்தில் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்