பிக்பாஸ் வீட்டிலிருந்து ஓவியா, தன்னுடைய காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் மனமுடைந்து, குழம்பி , மன உளைச்சல் காரணமாக, நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலை செய்யும் முடிவிற்கு சென்றார். அதன் பின் அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். அனால், அது வெறும் நடிப்புதான் என சினேகனிடம் கூறினார். அதன் பின் அவருக்கு உளவியல் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். ஆனாலும், அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவையே எடுத்தார் ஓவியா.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஓவியா, சென்னை சிட்டி செண்டருக்கு சென்றிருந்த போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவரிடம் ஆரவை இன்னும் காதலிக்கிறீர்களா? என அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓவியா “ ஆரவை இன்னும் நேசிக்கிறேன். அவர்தான் எனக்கு எல்லாமே. அவர்தான் எனக்கு வாழ்க்கை. அவரே சிறந்தவர். அவரை எப்போதும் நேசிப்பேன்” எனக் கூறினார்.